மதுரை: மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை நகரில் ஆயிரம் கோடி ரூபாயில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் விரைவில் துவங்கவுள்ளன.இத்திட்டத்தில் பெரியார் பஸ் ஸ்டாண்ட் மேம்பாடு, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி பார்க்கிங், சுற்றுலா, வைகை மேம்பாடு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் பஸ் ஸ்டாண்ட்டை மேம்படுத்த 131 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. பஸ் ஸ்டாண்ட், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட்கள் இணைக்கப்பட்டு நவீனப்படுத்தப்படும். தற்போதைய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் ஸ்டாண்ட் இடத்தில் பயணிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடம், வணிக வளாகம் அமைகின்றன. இரு பஸ் ஸ்டாண்ட்களையும் பிரிக்கும் ரோடு மீது பாலம் அமைகிறது. பழங்காநத்தத்திலிருந்தும், சிம்மக்கல்லிலிருந்தும் வாகனங்கள் பாலம் வழியாக செல்ல முடியும்.
விரைவில் பணிகள் : திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளன. புராதன சின்னங்களை மேம்படுத்துதல் மற்றும் கலாசார மையம் அமைக்க 63 கோடி, பழைய சென்ட்ரல் மார்க்கெட்டில் அடுக்குமாடி கார் பார்கிங் 28 கோடி, வைகை கரை மேம்படுத்த 93 கோடி மற்றும் குடிநீர், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளுக்கும் 130 கோடி ரூபாயில் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.கமிஷனர் அனீஷ்சேகர், ” சில திட்டங்களுக்கான டெண்டர் செப்., 20 முடிகிறது. ஒரே நேரத்தில் அனைத்து பணிகளும் துவங்கும். ஒவ்வொரு பணி முடிப்பதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
DINASUVADU
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…