புதுச்சேரியில் போதைமருந்து கொடுத்து 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து 8 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று வந்த 16 வயது சிறுமிக்கும் வழுதாவூர் பகுதியை சேர்ந்த விக்கி என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அது காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் சிறுமியை தோப்புக்கு அழைத்து சென்ற விக்கி,அந்த பெண்ணிடம் தவறாக நடந்துள்ளார் தனது நண்பர்களுக்கு போன் செய்து வரவழைத்து போதை மருந்து கொடுத்து 7 பேருடன் சேர்ந்து பலாத்காரம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.அதன் பின் தனது பெற்றோரிடம் தெரிவித்த அந்த சிறுமி நடந்ததை கூறி அழுதுள்ளார் இதுகுறித்து குழந்தைகள் நலவாரியம் மூலம் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் அந்த சிறுமியை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை நடத்தினர் .
இது குறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பான புகாரின் பேரில் விக்கி, முகிலன், சூர்யா உள்ளிட்ட 8 பேர் மீது திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்,இந்த 8 பேரை போஸ்கோ சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
சென்னையில் 11 வயது சிறுமியை அந்த அப்பார்ட்மென்டில் வேலைசெய்த காவலர்கள் 17 பேர் சேர்ந்து பாலியல் தொல்லை 7 மாதமாக கொடுத்து வந்துள்ளனர் இதன் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் இது அடங்குவதற்குள் புதுச்சேரியில் இப்படி ஒரு நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : சிபிஎம் மாநில செயலாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சி…
சென்னை : பொங்கல் பண்டிகை வந்துவிட்டது என்றாலே ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்ப்பதற்கும் விளையாட நினைக்கும் வீரர்களும் குஷியாகிவிடுவார்கள் என்றே கூறலாம். இந்த…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…
அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில், புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…
குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…
கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…