தமிழக அரசுப் பேருந்துக்கு புதுச்சேரியில் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக நேற்று மாலை தமிழக அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தை காலப்பட்டு பகுதியில் வழிமறித்த மர்மநபர்கள், அதில் இருந்த பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு வற்புறுத்தினர். இதை அடுத்து பெட்ரோல் ஊற்றி பேருந்தை எரித்து விட்டு அவர்கள் தப்பி ஓடினர்.
சிறிது நேரத்தில் தீ மளமளவெனப் பரவி பேருந்து முழுவதையும் சூழ்ந்து கொண்டது. தகவல் அறிந்து காலாப்பட்டு தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.
பேருந்து தீப்பிடித்து எரிந்த போது அவ்வழியாகச் சென்ற புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதுடன், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் பொம்மையார்பாளையம் பகுதியை சார்ந்த 6 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…