புதுக்கோட்டை அருகே 240 கிலோ கஞ்சா சிக்கியது..!!
50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தலுக்கு வைத்திருந்த கஞ்சாவை போலிசார் கைப்பற்றினர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆளில்லாத நாட்டுப்படகில் கடத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கடலோர பாதுகாப்பு குழு போலீசார் கைப்பற்றினர்.
ஜெகதாபட்டிணத்தில் உள்ள நாட்டுப்படகு துறைமுகத்தில் கடலோர பாதுகாப்புக்குழும போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, நாட்டுப்படகு ஒன்றில் கடத்தத் தயாராக வைக்கப்பட்டிருந்த 250 கிலோ எடையுள்ள கஞ்சாவை கைப்பற்றினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்