புதுக்கோட்டை அருகே ரூ.6 கோடி செலவில் ஆரம்ப சுகாதார நிலையம்!
6 கோடி ரூபாய் செலவில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே புதிதாக கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, மற்றும் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
முன்னதாக பந்துவக்கோட்டையில் அரசு உயர் நிலைப்பள்ளிக் கட்டிடம், வாண்டான்விடுதி அங்கன்வாடி கட்டிடம், கறம்பக்குடி சார்நிலை கருவூல கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன. தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.