புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் :முதல்வர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்…!!
புதியதாக உருவாகப்பட்ட நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நீண்ட நாட்களாக புதிய கூட்டுறவு ஒன்றியத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 300 உறுப்பினர்களை கொண்ட நாமக்கல் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் புதியதாக உருவாக்கப்பட்டது.
இதன் துவக்க விழா நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் புதிய கூட்டுறவு ஒன்றியத்தை முதலமைச்சர் பழனிசாமி துவக்கி வைத்தார். இந்தநிகழ்ச்சியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.