புதிய செயற்கைகோள் மூலம் துல்லியமான வானிலை மாற்றங்களை கண்டறிய முடியும்…இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை…!!
புதிதாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் மூலம் இயற்கை பேரிடர்களை துல்லியமாக முன்கூட்டியே கண்டறிய இயலும் என்று இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியின் 133-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், தமிழக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு வருவது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், ஏற்கனவே அனுப்பட்ட செயற்கைக்கோள் உதவியோடு தான் கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிந்து உயிரிழப்புகளை தவிர்க்க முடிந்தது என்றார். தற்போது அனுப்பப்பட்டுள்ள புதிய செயற்கைகோள் மூலம் வானிலை மாற்றங்களையும், பேரிடர்களையும் துல்லியமாக கண்டறிய முடியும் என்று மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.