அமைச்சரவைக் கூட்டத்தில் கலால் வரியைக் குறைப்பது குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 68 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 58 காசுகளும் உயர்ந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 80 ரூபாய் 11 காசுகளுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 14 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் சுமையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கலால் வரி மற்றும் விற்பனையாளர்களின் கமிஷனைக் குறைத்து விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல்
புதிய விலை – ரூ. 80.11
பழைய விலை- ரூ.79.79
வித்தியாசம்- 32 காசுகள்
டீசல்
புதிய விலை- ரூ. 72.14
பழைய விலை- ரூ.71.87
வித்தியாசம் – 27 காசுகள்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…