புதிய சாதனை படைத்த பெட்ரோல் விலை!80 ரூபாயை தாண்டி அபாரம்!

Default Image

அமைச்சரவைக் கூட்டத்தில் கலால் வரியைக் குறைப்பது குறித்து  விவாதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால் கடந்த 10 நாட்களில் பெட்ரோல் விலை 2 ரூபாய் 68 காசுகளும், டீசல் விலை 2 ரூபாய் 58 காசுகளும் உயர்ந்துள்ளன. இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் 80 ரூபாய் 11 காசுகளுக்கும் டீசல் விலை லிட்டருக்கு 72 ரூபாய் 14 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் சுமையை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கலால் வரி மற்றும் விற்பனையாளர்களின் கமிஷனைக் குறைத்து விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது. இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இப்பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல்
புதிய விலை – ரூ. 80.11
பழைய விலை- ரூ.79.79
வித்தியாசம்- 32 காசுகள்

டீசல்
புதிய விலை- ரூ. 72.14
பழைய விலை- ரூ.71.87
வித்தியாசம் – 27 காசுகள்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்