புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கையெழுத்து இயக்கம் – மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடங்கினர்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை க்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.புதிய கல்வி கொள்கைக்கு கருத்து தெரிவிக்கும் தேதி நேற்றுடன் முடியும் சூழலில் இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அனைவரிடம் இருந்தும் கையெழுத்து பெறப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலம் முழுவதும் 5,000 இடங்களில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!
April 21, 2025
“HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு.!
April 21, 2025