பி.எஸ்.என்.எல் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு வைத்த ஆப்பு!ஏமாந்த ஏர்டெல் வாடிக்கையாளர்கள்!
உடனடியாக ஏர்டெல் எண்ணில் இருந்து பி.எஸ்.என்.எல் எண் வைத்திருக்கும் நபர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏர்செல்லில் இருந்து 30 லட்சம் வாடிக்கையாளர்கள் ஏர்டெல்லுக்கு மாறியதால் நிகழ்ந்த சிக்கல்..
அண்மையில் ஏர்செல் கோபுரங்கள் செயல் இழந்ததால் நாடு முழுவதும் உள்ள் லட்சகணக்கான வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன்களை பயன்படுத்த முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து காலாவதியான ஏர்செல் நெட்வொர்க்கில் இருந்து 30 லட்சம் பேர் வரை ஏர்டெல் நெட்வொர்க்கிற்கு மாறினர்..! சில லட்சம் வாடிக்கையாளர்கள் வோடாபோன் நெட்வொர்க்கிற்கும் இடம்பெயர்ந்தனர்..!
இந்த நிலையில் அதிக வாடிக்கையாளர்களை ஈர்த்த தனியார் நிறுவனமான ஏர்டெல்லுக்கு மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் செக் வைத்துள்ளது.
ஒரு நிறுவனத்தின் சிம்கார்டில் இருந்து மற்றொரு நிறுவன சிம்கார்டை தொடர்பு கொண்டால் தடையற்ற சேவை வழங்க சம்பந்தபட்ட நிறுவனங்கள் பாய்ண்ட் ஆப் இண்டர்கணெக்ட் பயன்படுத்துவது வழக்கம். இதுவரை ஏர்டெல்லுக்கு தடையற்ற சேவைக்கான பாய்ண்ட் ஆப் இண்டர்கனெக்ட் வழங்கி வந்த பி.எஸ்.என்.எல்..! தற்போது வழங்கவில்லை என்று கூறப்படுகின்றது.
ஏர்டெல் 30 லட்சம் வாடிக்கையாளர்களை கூடுதலாக அதிகரித்ததும், அதற்குரிய கட்டணத்தை பெற்றுக்கொண்ட பி.எஸ்.என்.எல், அதிகரிக்கவேண்டிய பாய்ண்ட் ஆப் இண்டர்கனெக்ட்டை அதிகப்படுத்தாமல் , ஏர்டெல் வாடிக்கையாளர்களை அம்போவென்று விட்டு விட்டது. இதனால் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவை வழங்க இயலாமல் ஏர்டெல் தவித்து வருகின்றது..!
இதனால் தான் ஏர்டெல்லில் இருந்து பி.எஸ்.என்.எல் எண்ணை தொடர்பு கொண்டால் தொடர்பு கொண்டவரின் குரலே அவருக்கு எதிரொலிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
அரசுதுறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மலைபகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல் எண்ணையே பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக கடந்த சில நாட்களாக, காவல் அதிகாரிகளையும், அரசு பணியாளர்களையும் ஏர்டெல் எண்ணில் இருந்து தொடர்பு கொள்வதில் தடை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர் அதே நேரத்தில் தடையற்ற சேவை வழங்க இயலாத நிலையை ஏற்படுத்திய பி.எஸ்.என்.எல் மீது ஏர்டெல் நிர்வாகம் இதுவரை சட்டப்பூர்வ நடவடிக்கை எதும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
பி.எஸ்.என்.எல் நிர்வாகமாக மனமிறங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கைக்கு ஏற்ப பாய்ண்ட் ஆப் இண்டர்கனெக்ட்டுகளை அதிகரித்தால் மட்டுமே தடையற்ற சேவை கிடைக்கும், அதுவரை ஏர்டெல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் செல்போனில் பேசும் வார்த்தைகள், அனைத்தும் குகைக்குள் இருந்து எதிரொலிப்பது போல திரும்ப கேட்கும்..! என்று ஏர்டெல் சார்பில் பரிதாப விளக்கம் அளிக்கப்படுகின்றது.
இதனால் ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல்லும் இப்போது வாடிக்கையாளருக்கு முழுமையான சேவை வழங்க இயலாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது..! மத்திய தொலை தொடர்பு துறையும், பி.எஸ்.என் எல் நிர்வாகமும் பொதுமக்கள் நலன் கருதியாவது ஏர்டெல்லுக்கான பாய்ண்ட் ஆப் இண்டர்கனெக்ட்டுகளை அதிகாரித்து தடையற்ற சேவை வழங்க முயற்சிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.