பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு நற்செய்தி!நீங்களும் இனி பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம்!

Published by
Venu

பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு :

இன்று  காலை 9 மணிக்கு பிளஸ் ஒன் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலமும், எஸ்எம்எஸ் மூலமும் முடிவுகளை தெரிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.3% மாணவ,மாணவிகள்  தேர்ச்சி பெற்றுள்ளனர்.மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளனர்.இதில்  மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதம் 97.3% ஆகும்.

1. ஈரோடு -97.3%

2.திருப்பூர் 96.4% பேர்

3.கோவை 96.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாட வாரியாக தேர்ச்சி விகிதம்:

இயற்பியல் – 93 %,

வேதியல் – 92.7%,

உயிரியல் – 92.6%,

தாவரவியல் – 89.3%,

விலங்கியல் -91.8%,

கணிதம் – 92.5%,

கணினி அறிவியல் – 95 % தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் 188 அரசுப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.2,054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்கள் மூலமாக தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.

பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், ஆண்டினை பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் மேற்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில்இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடியதேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை:

பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் அச்சமடையத் தேவையில்லை. மறு தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை 12ம் வகுப்பை தொடரலாம் என்று அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

கடந்த 2017 -ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது. இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு வெளியான பிறகு அனைவருக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம். தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Recent Posts

நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு…போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…

21 mins ago

Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை…

சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…

21 mins ago

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…

47 mins ago

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…

1 hour ago

குடை முக்கியம்!! இந்த 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

2 hours ago

சாமியே சரணம் ஐயப்பா!! மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…

2 hours ago