பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி பொதுதேர்வு போல் பிளஸ் 1 மாணவ மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது. இதனையடுத்து இறுதி தேர்வுக்கான கால அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் 23-ந்தேதி முடிவடையும். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு வருகிற 11-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடையும்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்றைய தினம் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பள்ளிகள் இயங்காது. எனவே அன்று நடைபெற வேண்டிய தேர்வு 23-ந்தேதிக்கு பின்னர் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
என பள்ளிகல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…