சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடியை கொலைசெய்ய திட்டமிட்டு பட்டா கத்திகளுடன் சுற்றிதிரிந்த 4 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். குடிசை மாற்றுவாரியத்தில் பணிப்புரிந்து வரும் இவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டிமிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துசென்றதாக கூறப்படுகிறது. ரஞ்சித் அளித்த புகாரையடுத்து, வியாசர்பாடி பகுதியில் புளியந்தோப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த 4 பேரை சோதனை செய்ததில், பட்டா கத்தியுடன் வந்ததும், மேலும் இவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களை தயார் செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணன், சிவா, கோபால், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்தனர் .
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…