பிரபஞ்சன் மறைவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் …!
பிரபஞ்சன் மறைவிற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று புதுச்சேரியில் காலமானார்.
இந்நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துளளார்.அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், சமரசம் இல்லா படைப்பாளி பிரபஞ்சன். அவரது மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு. எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைந்தேன் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.