பிரதமர் மோடி வருகை… விண்ணில் ஏவப்படும் சிறிய ராக்கெட்.! இன்றைய பயண திட்டங்கள்….
இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் , மாதாபூரில் நடைபெற்ற “என் மண் என் மக்கள் யாத்திரை” நிறைவு விழாவில் கலந்து கொண்டார். இதன் பிறகு நேற்று மாலை மதுரையில் சிறுகுறு தொழில் முனைவோர் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு மதுரையில் தங்கினார் பிரதமர் மோடி.
இன்று, அவர் தூத்துக்குடி மற்றும் நெல்லைக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். இன்று காலை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரபட்டினத்தில் அமைக்கப்பட்டுள்ள ராக்கெட் ஏவுதலத்திற்கு அடிக்கல் நாட்ட உள்ளார் .
Read More – மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..! மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்
தூத்துக்குடி பயணம் :
மேலும் , தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 7,055.95 கோடி ரூபாய் மதிப்பிலான துறைமுக பணிகள், 265.15 கோடி ரூபாய் மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 மேம்பாட்டு பணிகள், 124.32 கோடி ரூபாய் மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.
17,300 கோடி ரூபாய் திட்டங்கள் :
குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி , 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், 1,477 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முன்னதாக முடிக்கப்பட்டள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரெயில் பாதை, நாடு முழுவதும் 4,586 கோடி ரூபாய் செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி. இவ்வாறாக இன்று தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் 17,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..!
சிறிய ரக ராக்கெட் :
குலசை ராக்கெட் ஏவுதளத்திற்க்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட உள்ள நிலையில், அங்கு தற்காலிகமாக கான்க்ரீட் அமைக்கப்பட்டு சிறிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து காற்றின் திசை மற்றும் வேகத்தை அளவிடுவதற்கு ஆர்எஸ்200 சவுண்டிங் என்ற சிறிய ரக ராக்கெட் பிற்பகல் 1:30 மணி அளவில் சோதனை ஓட்டத்திற்காக விண்ணில் ஏவப்படுகிறது. இதில் செயற்கைக்கோளுக்கு பதிலாக காற்றை அளவிடும் கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.
Read More – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…
பயண திட்டம் :
இன்று தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி காலை 9.30 மணி அளவில் வஉசி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இறங்கு தளத்தில் ஹெலிகாப்டர் மூலம் தரையிறங்குகிறார். அங்கு வஉசி துறைமுகத்தில் 17000 கோடி ரூபாய் திட்டங்களை தொடங்கி வைத்து நெல்லை செல்கிறார்.
இந்த விழா முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் நெல்லைக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு பாலையியம்கோட்டையில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற உரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டம் காலை 11.30 மணியளவில் தொடங்குகிறது. பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி நெல்லையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.