பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக பேச்சு, குண்டு வெடிப்பு வழக்கில் விடுதலையானவர் கைது..!

Default Image

சேலத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். இவர் தனது 3 கார்களை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஒருவரிடம் கொடுத்து ரூ.2 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரகாஷ் அந்த கார்களை மீட்க மேட்டுப்பாளையத்துக்கு சென்றார்.

அப்போது அந்த நபர், கோவை குனியமுத்தூர் சாரமேட்டை சேர்ந்த பழைய கார்களை விற்பனை செய்யும் வியாபாரியான ரபீக் (வயது 50) என்பவரிடம் உங்கள் கார்கள் உள்ளன. நீங்கள் ரூ.4 லட்சம் கொடுத்தால்தான் கார்கள் கிடைக்கும் என்று கூறி உள்ளார். அதற்கு அவர் நான் கடன் வாங்கியது ரூ.2 லட்சம் தானே, பின்னர் ஏன் ரூ.4 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

அதற்கு அந்த நபர் நீங்கள் ரபீக்கை நேரில் சந்தித்து பேசி பாருங்கள், தொகையை குறைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறி உள்ளார். இதையடுத்து பிரகாஷ், ரபீக்கின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அதற்கு அவர், தான் தமிழகத்திலேயே பெரிய ஆள் என்றும், தனியார் நிதிநிறுவனத்திடம் பணம் பறிப்பதே எங்கள் குறிக்கோள் என்றும் கூறி உள்ளார்.

அவர்கள் இருவரும் பேசிய 8 நிமிடங்கள் கொண்ட ஆடியோ, வாட்ஸ்-அப், முகநூல் உள்பட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த உரையாடலின் இடையில், ரபீக், நாங்கள் பிரதமர் மோடியை கொல்ல திட்டமிட்டு உள்ளோம் என்றும் கூறியதாக தெரிகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த ஆடியோவை கேட்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தெரியவந்ததும், அவர்கள் அந்த ஆடியோவை பதிவிறக்கம் செய்து, உரையாடலை கேட்டனர். அப்போது அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ஆடியோவில் ரபீக் பேசி இருப்பது பற்றி போலீசார் கூறியதாவது:-

‘நாங்கள் தமிழகத்தில் உள்ள பல சிறைகளுக்கு சென்று வந்தவர்கள். யாருக்கும் பயப்படமாட்டோம். சாதாரணமாக எந்த செயலிலும் இறங்க மாட்டோம். ஆனால் வந்ததை விடமாட்டோம். கார் வைத்திருப்பவர்களை நாங்கள் எதுவும் செய்வது இல்லை. ஆனால் கார்களுக்கு கடன் கொடுப்பவர்களை நாங்கள் விடுவது இல்லை. அவர்களிடம் இருந்து பல கார்களை எடுத்து உடைத்து உள்ளோம்.

எங்களை பற்றி போலீசாருக்கு நன்றாக தெரியும். எந்த கொம்பனாக இருந்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. ஏற்கனவே நாங்கள் அத்வானியை கொல்ல குண்டு வைத்தோம். தற்போது பிரதமர் மோடியையும் கொல்ல திட்டமிட்டு உள்ளோம். நான் உன்னிடம் பேசுவதே பெரிது. இதுவரை என் மீது 22 வழக்குகள் உள்ளன. 160 கார்களை எடுத்து உடைத்துள்ளோம். ஆனால் இதுவரை எங்களை யாரும் கைது செய்யவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்