பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை, பயந்தாங்கொள்ளி…!வைகோ
பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
இதற்கு முன் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து மத்திய, மாநில அரசின் மனுக்கள் மீதான வுசாரணை கடந்த 9-ந் தேதி உச்சநீதிமறத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மத்திய அரசு வரைவுத் திட்டத்தை செயல்படுத்தி மே 3ஆம் தேதி சமர்பிக்க வேண்டும் என விசாரணையை மே 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். இந்நிலையில் பிரதமர் மோடி நாளை தமிழகம் வரும் போது, அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை என்றும் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார். மேலும் தமிழகத்தில் சாலையில் பயணிக்கும் தைரியம் மோடிக்கு இல்லை என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.