பிரதமர் நரேந்திர மோடி எல்லா மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் செயல்படுகிறார்!மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,நாட்டிலுள்ள எல்லா மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில்தான் பிரதமர் மோடி செயல்படுவதாக தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தான் தத்தெடுத்த கிராமமான முத்தலக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்கள்டம் பேசிய அவர், தமிழகத்தை தமிழர்தான் ஆள வேண்டும் எனக் கூறுபவர்கள் மத ரீதியாகவும், இன ரீதியாகவும் தமிழகத்தை பிளவுபடுத்தப் பார்ப்பதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.