பிரதமர் தமிழகத்தை பார்வையிடாதது புறக்கணிக்கும் செயல்…கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு…!!
புயல் பாதித்த இடங்களை பிரதமர் மோடி பார்க்காதது தமிழகத்தை திட்டமிட்டு புறக்கணிப்பதாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மோடி அரசாங்கத்தில், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, சி.பி.ஐ ஆகியவை சுயமாக செயல்பட முடியவில்லை என்று குற்றம்சாட்டினார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பிரதமர் மோடி பார்க்காதது
திட்டமிட்டு தமிழகத்தை புறக்கணிக்கும் செயலாகும் என்றும் அவர் புகார் கூறினார்.
dinasuvadu.com