பிரசார வாகனம் தடுத்து நிறுத்தம்…!! நெல்லையில் பரபரப்பு.

Default Image

மாணவர்களின் பிரசார வாகனத்தை காவல்துறையினர் தடுத்ததால் பரபரப்பு..

திருநெல்வேலி ,

இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சிம்லாவில் நடைபெறுகின்றது.அந்த வகையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அகில இந்திய அளவிலான பிரச்சார பயணம் செப்டம்பர் 3 முதல் 16 வரை நடைபெற்றுவருகின்றது.அந்த வகையில்  கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லக்கூடிய பிரச்சாரம் நேற்று  கன்னியாகுமரியில் இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்திய பொது செயலாளர் டாக்டர் விக்ரம் சிங் தொடக்கி வைத்தார்..

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கிய இந்த பிரச்சார பயணத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி.கண்ணன் தலைமை வகித்தார்.
வந்திருந்த அனைவரும் அனைவரையும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ஜெசின் ஜோசப் வரவேற்றார்.இதில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன் ,  அகில இந்திய தலைவர் வி பி சானு ,கேரள மாநிலத் தலைவர் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் காவியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று திருநெல்வேலியில் ஒவ்வொரு கல்லூரி முன்பாகவும் பிரச்சாரம் நடத்திக் கொண்டு இருக்கும் பொது நெல்லை மாநகர காவல்துறையினர் பிரச்சார வாகனம் எங்கும் செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தினர்.அது மட்டுமில்லாமல் வாகனம் எங்கும் செல்லாதவாறு முன்னும்  , பின்னும் காவல்துறை வாகனத்தை விட்டு மாணவர் பிரச்சாரத்தை நிறுத்தினர்.எனவே அங்கே பரபரப்பு ஏற்பட்ட்து..

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்