பா.சிதம்பரம் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து …!
முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரம் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.அதேபோல் திமுகவின் புதிய பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் பா.சிதம்பரமும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் ,திமுக தலைவராக முன்மொழியப்பட்டு இன்று தேர்வு செய்யப்படும் திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.அதேபோல் திமுகவின் புதிய பொருளாளர் திரு துரைமுருகன் அவர்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU