பாராசூட்டில் பறந்த ராணுவ வீரர்களை கண்டு கிராம மக்கள் வியப்பு
பாராசூட்டில் பறந்த ராணுவ வீரர்களை கண்டு கிராம மக்கள் வியப்பு
விருத்தாசலம் அருகே இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராணுவ வீரர்கள் பாராசூட்டில் பறந்தனர்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே, கம்மாபுரம் பகுதிகளில், என்.எல்.சி நிறுவனம், நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அப்பகுதியில் பாராசூட் பறப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ராணுவத்தில் இளைஞர்கள் சேர வேண்டும் என வலியுறுத்தவே ராணுவ வீரர்கள் பாராசூட்டில் பறப்பது தெரிய வரவே, அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த பாராசூட் பயணம் செஞ்சியில் இருந்து பெரம்பலூர் செல்லும் போது, காற்றின் திசையால், விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், மருங்கூர் வழியாக சென்று ராஜேந்திர பட்டினம் பெரிய ஏரியில் தரை இறக்கப்பட்டது. மீண்டும் பாராசூட் பிரிக்கப்பட்டு ராணுவ வாகனத்தில் தரை வழி மார்க்கமாக பெரம்பலூர் சென்றது.