பாரதிராஜா வீட்டில் பலத்த போலிஸ் பாதுகாப்பு !
போலீஸ் பாதுகாப்பு இயக்குநர் பாரதிராஜாவின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போடப்பட்டுள்ளது. ஊடகத்தில் பணிபுரியும் பெண்களை தரக்குறைவாக விமர்சித்த எஸ்.வி.சேகருக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாரதிராஜா, காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதை அடுத்து அவரது வீடு மற்றும் அலுவலகம் முன் காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியானது. இதை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பாரதிராஜாவின் அலுவலகம், தியாகராயநகரில் உள்ள அவரது வீட்டின் முன் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.