பாரதிய ஜனதா என் மீது நம்பிக்கை வைத்துள்ளது! தமிழக பாஜக தலைவர் தமிழிசை
பாரதிய ஜனதா என் மீது நம்பிக்கை வைத்துள்ளதை முரளிதர் ராவ் உறுதி செய்துள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.மேலும் கட்சியை பலப்படுத்த அமித்ஷா தமிழகம் வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசையை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மாற்றவுள்ளதாக வதந்தி வெளியாகி வந்தது.
தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் இது குறித்து கருத்து தெரிவித்தார். தமிழக பாஜக தலைவரை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மாற்றவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற செய்தி, உண்மைக்கு புறம்பானது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.