பாஜக ஒன்றும் திமுகவிற்கு எதிரி கட்சி கிடையாது …!அவர்கள் எங்களுக்கு இப்படித்தான்…! திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பகீர் தகவல்
நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
திமுக தலைமை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,திருச்சியில் ஆகஸ்ட் 17இல் கருத்துரிமைக் காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 19ஆம் தேதி மதுரையிலும், ஆகஸ்ட் 25ஆம் தேதி கோவையிலும்,ஆகஸ்ட் 26ஆம் தேதி திருநெல்வேலியிலும்,ஆகஸ்ட் 30ஆம் தேதி சென்னையிலும் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவிப்பு வெளியிட்டது.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டாலும் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
இந்நிலையில் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்வது குறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது. நாடாளுமன்ற உறுப்பினராக அல்லாத ஒருவருக்கு இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைத்தது இந்தியாவில் இது தான் முதல் முறை எனவும் அவர் கூறினார்.
DINASUVADU