சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாணவி சோபியா கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் வருகை தந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்டார் சோபியா என்ற பெண்மணி எனவே சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்தார்.இதனையடுத்து, சோபியாவை கைது செய்த போலீசார், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். விசாரித்த தூத்துக்குடி நீதிமன்றம் தமிழிசை முன் முழக்கமிட்ட சோபியாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் என்று உத்தரவு பிறப்பித்தது.
பின் விமானத்தில் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் சோபியா மீது ஜாமினில் வரமுடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் இவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைதான சோபியாவின் ஜாமின் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.பின்னர் மாணவி சோபியாவுக்கு ஜாமீன் வழங்கியது தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.நிபந்தனைகள் எதுவும் விதிக்காமல் ஜாமின் வழங்கியது. மேலும் சோபியாவுக்கு அவரது பெற்றோர்கள் அறிவுரை வழங்கும் படியும் நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.பின்னர் கைதான மாணவி சோபியா ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மாணவி சோபியா கைது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மாணவி சோபியாவை கைது செய்ததை தவிர்த்து, எச்சரிக்கை செய்து அனுப்பியிருக்கலாம். சோபியாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…