பாஜகவிடம் கூட்டணிக்கு புக் செய்து வைக்கும் திமுக ….!ஓகே சொல்ல தயார் நிலையில் இருக்கும் பாஜக ..!காரணம் என்ன ?

Published by
Venu

திமுக -பாஜக இடையே என் இந்த திடீர் மாற்றம்?காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி காலமானார்.மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டம் ஆகஸ்ட் 17, 19, 25, 26, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது.
அதே போல்,  ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார்.திமுக நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேசிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பாஜக தலைவர் அமித் ஷாவின் இந்த வருகையில் திமுகவில் சலசலப்பு ஏற்படுள்ளது.அதேபோல் அதன் கூட்டணி கட்சியுமான காங்கிரசும் கலக்கத்தில் உள்ளது.
 
அதேபோல்  திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பு பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்று தமிழக பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.மேலும்  பாரதிய ஜனதா சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கலாம் என்றும் கூறினார்.
ஆனால் திமுக -பாஜகவை பொறுத்தவரையில் எதிர் எதிர் கொள்கைகளை உடையவர்கள் ஆவார்கள்.கருணாநிதி மறைவிற்கு பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக தரப்பில் இருந்து வலுவாக வருகிறது.அதேபோல் மாற்று கட்சியினரும் இந்த கோரிக்கையை மத்தியில் ஆளும் பாஜகவிடம் முன் வைத்து வருகின்றனர்.
ஆகஸ்டு 30 சென்னையில் நடைபெறும் கலைஞர் நினைவேந்தல் கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கிறார் என்ற தகவல் அதிக அளவில் வெளியாகி வருகின்றது.இருந்தாலும் தமிழக பாஜக அதை மறுத்து வருகிறது.
இந்த விவகாரத்தை வைத்து திமுக மற்றும் பாஜகவினர் நெருக்கம் காட்டி வருகின்றனர்.சமீபகாலமாக திமுகவும் பாஜகவை விமர்சிப்பதை நிறுத்தியது போல் தெரிகிறது.பாஜகவும் நிறுத்தியது போல் தெரிகிறது.அதற்கு மாறாக இரு கட்சிகளும் புகழ்சி என்ற வார்த்தையை கையில் எடுத்து வருகிறது.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது,கருணநிதியின்  வாரிசு என்பதால் மட்டுமே ஸ்டாலின் பதவிக்குவரவில்லை, அடிப்படை தொண்டனாக இருந்து பதவிக்கு வந்தவர் என்று அவரை புகழ்ந்து பேசினார்.
அதேபோல்  திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறுகையில் ,
Image result for துரைமுருகன்
பாஜக எதிர் கட்சிதான், ஆனால் எதிரி என்று சொல்ல முடியாது.இந்த மாதிரி வெளியாகும் கருத்துகள் கட்சிகளின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது.இதனால் இந்த இரு கட்சிகளிடையே கூட்டணி நடக்குமா ?இல்லை மறைந்த கருணாநிதிக்கு  பாரத ரத்னாவிற்க்காகவா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
DINASUVADU

Published by
Venu

Recent Posts

வாட்ஸ்அப் செய்திகளை ‘அவர்கள்’ கண்காணிக்க முடியும்! மார்க் ஸுக்கர்பர்க் பகீர் தகவல்!

நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில்,  தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…

10 hours ago

இந்திய ராணுவ தின விழா அணிவகுப்பில் ரோபோ நாய்கள்!

புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…

11 hours ago

அடேங்கப்பா..கரும்பு சாப்பிட்டா வாய் துர்நாற்றம் அடிக்காதா.?

"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால்  பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…

13 hours ago

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

14 hours ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

14 hours ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

1 day ago