பழனி தண்டாயுதபாணியே சுரண்டிய கயவர்கள்…!நேரடி விசாரணையில் களமிரங்கும் பொன். மாணிக்கவேல்..!!அஞ்சும் வட்டார கும்பல்கள்..!
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி பால தண்டாயுதபானி கோவில் வெகு சிறப்பு வாய்ந்தது.இந்த திருக்கோவிலில் உற்சவர் சிலையில் முறைகேடு செய்துள்ளதாக தகவல் வெளிவந்த நிலையில் கடும் அதிர்ச்சியை பக்தர்களிடமும் , மக்களிடமும் ஏற்படுத்தியது.இந்த சிலை முறைகேடு கடந்த 2004ஆம் ஆண்டு பழனி பால தண்டாயுதபாணிக்கு என்று 200 கிலோ எடையிலான ஐம்பொன்னால் ஆன உற்சவர் சிலை செய்யப்பட்டது.
இந்த சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்த நிலையில் அங்கு அதிரடியாக சோதனை செய்த ஜ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த முறைகேட்டை வெட்டம் வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.200 கிலோ தங்கத்தில் முறைகேடு செய்த கோவில் ஸ்தபதி முத்தையா, அன்றைய கோவில் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கூண்டோடு கைது செய்யப்பட்டு கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் பழனி கோவில் சிலை முறைகேடு விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் முதல் தனது நேரடி விசாரணை தொடங்குகிறது என்று சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.இதில் பல பெரிய தலைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.