பழனியில் பயங்கரம்!வேலையை விட்டு நீக்கியதால் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை!

Default Image

ரியல் எஸ்டேட் அதிபரை,பழனி தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து  குத்தி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலையை விட்டு நீக்கியதால் கத்தியை எடுத்த ஓட்டுனரின் விபரீத புத்தி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பழனி டவுன் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவிராஜா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரவிராஜா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

வியாழக்கிழமை மருத்துவமனை வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை அறுத்தார். அருகில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டியதால் அங்கிருந்தவர்கள் பயந்து ஓட்டம் பிடித்தனர். அதன் பிறகு அந்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு மருத்துவமனைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த ரியல் எஸ்டேட் அதிபர் ரவிராஜாவுக்கு சொந்தமான காரை எடுத்துச்கொண்டு தப்பிச்சென்றார்.

பலத்த காயம் அடைந்த ரவிராஜாவுக்கு பழனியில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பழனி காவல்துறையினர் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில் ரவிராஜாவை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு காரை திருடிச்சென்ற நபர் சென்னையை சேர்ந்த சந்துரு என்பது தெரியவந்தது. அந்த நபர் சில மாதங்களுக்கு முன்பு ரவிராஜாவிடம் ஓட்டுனராக பணி புரிந்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.

கார் ஓட்டுனர் சந்துருவின் நடவடிக்கைகள் சரியில்லாததால் ரவிராஜா அவரை பணியில் இருந்து நீக்கி உள்ளார் அதன் பின்னர் சரியான வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளான் சந்துரு. இதில் ஏற்பட்ட பகை காரணமாக அவரை கண்காணித்து இந்த கொலை வெறி தாக்குதலை அரங்கேற்றியுள்ளான் என்கிறது காவல்துறை.

இதற்கிடையே காருடன் தப்பி சென்ற சந்துருவை தாராபுரம் சோதனைச் சாவடியில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர். அவனை பழனி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓட்டுனர் வேலையை இழந்ததால் புதிதாக வேலை தேடிக்கொள்வதை விட்டு விட்டு விபரீத புத்தியால் கொலையாளியாகி சிறையில் கம்பி எண்ணுகிறான் கார் ஓட்டுனர் சந்துரு என்கிறனர் காவல்துறையினர்..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்