பழநி கோவில் ஐம்பொன் சிலை முறைகேடு வழக்கு! விசாரணைக்கு அழைக்கப்பட்ட தண்டாயுதபாணி தலைமறைவு!
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர்,பழநி கோவில் ஐம்பொன் சிலை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் தலைமறைவாகியுள்ளார்.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் புதிய ஐம்பொன் சிலை செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தங்கம் பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த தங்கத்தில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறப்பட்ட புகாரில், தலைமை ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா ஆகியோர் சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வந்துள்ளனர்.
இந்த வழக்கில் திருத்தணி கோவிலின் ஓய்வு பெற்ற இணை ஆணையர் புகழேந்தி, 2004-ல் இந்து சமய அறநிலையத் துறையின் தலைமையிட நகை சரிபார்ப்பாளராக இருந்த தெய்வேந்திரன் ஆகியோரும் அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பழனி கோவிலுக்கு சிலை செய்யப்பட்ட போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக இருந்த தனபாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் இதுவரை ஆஜராகவில்லை. இதனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக கருதி சிலை தடுப்பு போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.