பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!இனி ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும்! பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன்
பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் ,அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதைத் தடுக்க, அரசு என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 14 வகையான இலவச பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அரசு பள்ளியில் மாணவர்களை சேர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
மேலும் ஆங்கில மோகத்தால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்ப்பதாகக் கூறிய அமைச்சர், ஆரம்ப பள்ளி வளாகத்தில் உள்ள அங்கான்வாடிகளில் மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.