பள்ளி மாணவர்களுக்கு இனிப்பான செய்தி…!25000 மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி …!அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு
12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது.இந்த திட்டங்கள் மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது.
இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் இருக்கின்றனர்.12ம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.அதேபோல் நீட் தேர்வில் மத்திய அரசு கொண்டுவரும் மாற்றங்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.