கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நேற்று திறந்த நிலையில் மாணவர்கள் புதிய பாஸ் வழங்கும் வரை பழைய பஸ் பாஸில் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இலவச பஸ் பாஸ் குறித்து தமிழக போக்குவரத்து அதிகாரி சென்னையில் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்தார். மாணவர்கள் காட்டும் பஸ் பாஸ்சை ஏற்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நேற்று திறந்தது. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கிய கோடை விடுமுறை நேற்று முன் தினத்துடன் முடிவடைந்தது.
மாநிலம் முழுவதும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது . பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடநூல்கள், சீருடைகள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை நிறம் மாற்றப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பூர்த்தி செய்யவும், வாகனங்களை சரியாக பராமரிக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…
நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…