பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி என்ற பழைய முறையே தொடரும்!அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி என்ற பழைய முறையே தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி புதிய பாடப்புத்தகங்களில் ஆண்டுகளை குறிப்பிடும்போது கி.மு, கி.பி என்று வழக்கத்தில் உள்ள முறைக்கு பதிலாக பொ.ஆ.மு, பொ.ஆ.பி (பொது ஆண்டுக்கு முன், பின்) என்று உள்ளது.
சட்டபேரவையில் ராதாபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இன்பதுரை எழுப்பிய கேள்விக்கு கி.மு, கி.பி என்ற பழைய முறையே தொடரும் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார்.
கி.மு, கி.பி என்றால் கிறிஸ்து பிறப்பதற்கு முன்(கி.மு ), கிறிஸ்து பிறப்பதற்கு பின் (கி.பி) என்று பொருள் ஆகும்.