பள்ளியை தரம் உயர்த்தாததால் மாணவ மாணவியர் மறியல்
திருச்சி: ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை தரம் உயர்த்தததால் மாணவ மாணவியர் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம் மனப்பாறை அருகே, கார்வடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இதில் 120 மாணவ மாணவியர் படிப்பதால், உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தக் கோரி கடந்த 10 வருடமாக மாக்கள் போராடி வருகின்றனர். பொதுமக்கள் பங்களிப்பாக ஓரு லட்சம் ரூபாய் மற்றும் ஐந்து ஏக்கர் நிலமும் வழங்கியுள்ளனர். தற்போது நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரியும் இந்த பள்ளியை தரம் உயர்த்துததால், பஃஅல்லியை தரம் உயர்த்தக்கோரி மாணவ மாணவியர் தங்கள் பெற்றோருடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். மருங்காபுரி தாசில்தார் கருணாகரன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை சமாதானபடுத்தினர். இதனையடுத்து மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.