பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ,மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, சென்னையில் செய்தியாளர்களிடம் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது என்ற நோக்கில் ரேங்க் முறை ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
போட்டி தேர்வுகளை மாணவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில், பிளஸ் டூ தேர்வில் கடினமான கேள்விகள் கேட்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.