பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!
சென்னையில் அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் வழிப்பறி அதிகரித்து வந்தது. இதுதொடர்பான விசாரணையின் போது, பாண்டி பஜார் மற்றும் எம்.ஜி.ஆர். நகரில் கொள்ளை அடித்த போது சிக்கிய வீடியோ காட்சிகளில் கொள்ளையன் ஒருவனின் கையில் டாட்டூ இருந்தது.
இதை வைத்து விசாரணை நடத்திய அசோக் நகர் போலீசார், கேளம்பாக்கத்தில் டாட்டூ கடை வைத்திருந்த யுவராஜ் என்பவனை பிடித்து விசாரணை நடத்திய போது அவனும், அவனது கூட்டாளிகளான கல்லூரி மாணவன் விஜய், மார்ட்டின் ஆகியோர் சேர்ந்து கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டான்.