பலத்த காற்றுடன் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றம்!

Published by
Venu

தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் பலத்த காற்றுடன், கடல் சீற்றமாக காணப்படுகிறது.

கேரளா மற்றும் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு பெருமளவு மழையைக் கொடுக்கும் தென்மேற்கு பருவமழை மே கடைசி வாரத்தில் தொடங்குகிறது. இந்த ஆண்டில் சரியான நேரத்தில் தொடங்கியுள்ள பருவமழை அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 26ம் தேதி தொடங்கியது.

கேரளாவில் திருவனந்தபுரம், புனலூர், கொல்லம், ஆலப்புழா உள்ளிட்ட இடங்களில் மாலை முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருவமழை காரணமாக தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ் கோடியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பலத்த காற்றுடன் கடல் அலைகள் சீற்றமாக உள்ளன. 20 அடி உயரம் வரை ராட்சத அலைகள் எழுவதால் பார்ப்பவர்களுக்கு அச்சமூட்டும் வகையில் உள்ளது.  கடல்சீற்றம் காரணமாக நாட்டுப்படகு மீனவர்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடல் அலைகள் சீற்றத்துடன் எழுகின்றன. கேரள எல்லைப் பகுதியான வள்ளவிளை, மார்த்தாண்டம், நீரோடி கடலோரப் பகுதிகளில் பெரிய அலைகளாக வந்து கரைகளை தாக்கியதில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. வள்ளவிளை, குழித்துறை இடையே இயக்கப்பட்ட அரசுப்பேருந்தின் மேற்கூரை காற்றின் வேகத்தால் தூக்கி வீசப்பட்டது. குமரிமுனையில் கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கான படகு சேவை நிறுத்தப்பட்டது.

இதே போன்று தூத்துக்குடி மாவட்டத்திலும் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்பட்டதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

கத்திக்குத்து விவகாரம் : “பாலாஜியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது”…நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி!!

கத்திக்குத்து விவகாரம் : “பாலாஜியின் உடல் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது”…நேரில் சென்ற உதயநிதி ஸ்டாலின் பேட்டி!!

சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…

14 mins ago

கத்திக்குத்து விவகாரம்: மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை… லிஸ்ட் போட்ட இபிஎஸ்.!

சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

21 mins ago

“யூடியூபர் இர்ஃபான் செய்தது கொலை குற்றமில்லை..” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…

47 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்-பிடிவாதம் பிடிக்கும் அண்ணாமலை..!

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை  வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…

56 mins ago

மருத்துவருக்கு கத்திக்குத்து : அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு!

சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…

1 hour ago

“மருத்துவர் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை : சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜிக்கு மருத்துவமனை உள்ளே கத்திகுத்து சம்பவம்…

1 hour ago