பருவமழை வெளுத்து வாங்குவதால் குற்றால அருவில் குளிக்க தடை..!!
கேரளாவில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்து கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கோவைக் குற்றாலத்துக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறை 2-வது நாளாகத் தடைவிதித்துள்ளது.பாதுகாப்பு கருதி, கோவைக் குற்றாலத்துக்கு செல்லவும், அங்கு குளிக்கவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
கோவைக் குற்றாலத்துக்கு வரும் பயணிகள் சாடிவயல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றனர். மறு உத்தரவு வரும் வரை இந்த தடை நீடிக்கும் எனவும் வனத்துறை அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்