பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டம் காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

Default Image

பரவலாக பெய்துவரும் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில்  காரையார், மணிமுத்தாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

143 அடி உயரமுள்ள காரையார் அணையின் நீர்மட்டம் 64 அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு இரண்டாயிரத்து 667 கனஅடியாக இருக்கிறது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்துள்ளது.

இதேபோல், 84 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 58 கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்