பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2-வது நாளாக நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் குற்றாவளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா.இவரிடம் நேற்று ஐ.டி. அதிகாரிகள் சுமார் 8.30 மணி நேரம் விசாரித்த நிலையில் 2வது நாளாக இன்றும் நீடித்த ஐ.டி.விசாரணையானது 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.8 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.2017 ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இந்தியாவிலே ஒரே நாளில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதராவாளர்கள் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ஏன் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி நிறுவனத்திலும் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.இந்த சோதனையானது 5 நாட்கள் நடந்த நிலையில் இது தொடர்பாக சிறையில் உள்ள சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…