பரபரப்பு பொங்கல் சாப்பிட்டதால் 2 குழந்தைகள் உயிரிழப்பு..அதிர்ச்சி சம்பவம்
- திருப்பத்தூர் அருகே பொங்கல் சாப்பிட்டதால் 2 குழந்தைகள் உயிரிழப்பு
- சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் தைப்பொங்கல் திருவிழாவின் ஒரு நிகழ்வான அவனியாபுரம் ஜல்லிக்கட்டும் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிகழ்வுகளை மக்கள் கண்டு ரசித்து வந்த நிலையில் தான் ஒரு சோகம் நிகழ்ந்து அனவரையையும் அதிர்ச்சியாக்கி உள்ளது.திருப்பத்தூரில் அருகே பொங்கல் சாப்பிட்ட 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் அம்மன்கோவில் கிராமத்தில் வீட்டில் செய்த பொங்கலை சாப்பிட்ட ஜெயஸ்ரீ மற்றும் தனுஸ்ரீ என்ற இரண்டு சிறுமிகளும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து உள்ளனர் இதனால் சிறுமிகளின் பெற்றோர் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அனுமதிக்கப்பட்ட இரண்டு இளம் பிஞ்சுகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமிகள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.இந்த செய்தி அந்த ஊர் கிராமமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.