சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம் உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு..
சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழி பசுமை விரைவுச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.இந்த போராட்டத்தை தமிழக முழுவதும் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு அளித்து வந்தனர்.போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு, மிரட்டல் என ஒடுக்குமுறையை மக்கள் மீது ஏவியது..
சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.இத்திட்டத்தால் 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தினர், 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சாலையை அமைக்க 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் அழிக்கப்படவுள்ளது. மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், 10 ஆயிரம் கிணறுகள், 100-க்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள், லட்சக்கணக்கான மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற மரங்கள் அழிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், இடிக்கப்படவுள்ளது. இந்த படுபாதக செயலை “வளர்ச்சி” என்கிறார்கள் என்று மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சூழலில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவழி சாலை தொடர்பான வழக்கில் பரபரப்பான தீர்ப்பளித்தது.
அது என்னவென்றால் ,
2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் 105 வது பிரிவு சொல்லும் சட்டம் படி எட்டுவழிசலைக்கு நிலம் கையாக்கப்படுத்தலாம் ,அதற்க்கான முழு உரிமை அரசுக்கு உண்டு என பரபரப்பான தீர்ப்பை அளித்தது.நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்..
DINASUVADU
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…
சென்னை : கிண்டி பகுதியில் செயல்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று காலையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு…
சென்னை : பிரபல எழுத்தாளர் ராஜ் கௌதமன் (74) காலமானார். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழ் கலாசார மற்றும் இலக்கிய…
வயநாடு : இன்று (நவம்பர் 13) ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலோடு, வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி-25ம் தேதி அதிபராக பதவியேற்கவுள்ளார்.…
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…