பரபரப்பு.” எட்டுவழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம் “-ஹைகோர்ட் தீர்ப்பு..!!

Default Image

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தலாம்  உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு..

சேலத்தில் இருந்து சென்னை வரை எட்டுவழி பசுமை விரைவுச் சாலை அமைப்பதை எதிர்த்து சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் கடுமையாக எதிர்த்து வந்தனர்.இந்த போராட்டத்தை தமிழக முழுவதும் உள்ள மக்கள் முழுமையாக ஆதரவு அளித்து வந்தனர்.போராட்டத்தை ஒடுக்கும் விதமாக கைது, சிறை, பொய் வழக்கு, மிரட்டல் என ஒடுக்குமுறையை மக்கள் மீது ஏவியது..

சேலம் – சென்னை எட்டுவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்தனர்.த்திட்டத்தால் 30 ஆயிரம் ஏழை விவசாய குடும்பத்தினர், 72,273 விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். இச்சாலையை அமைக்க 8,000 ஏக்கர் விளைநிலம், 500 ஏக்கர் வனப்பகுதி, 8 மலைகள் அழிக்கப்படவுள்ளது.  மக்களின் வீடுகள், விவசாய நிலங்கள், 10 ஆயிரம் கிணறுகள், 100-க்கும் மேற்பட்ட ஏரி-குளங்கள், குட்டைகள், லட்சக்கணக்கான மா, தென்னை, வாழை, பாக்கு போன்ற மரங்கள் அழிக்கப்படும். 20-க்கும் மேற்பட்ட பள்ளிகள், இடிக்கப்படவுள்ளது. இந்த படுபாதக செயலை “வளர்ச்சி” என்கிறார்கள் என்று மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சூழலில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் எட்டுவழி சாலை தொடர்பான வழக்கில் பரபரப்பான தீர்ப்பளித்தது.

அது என்னவென்றால் ,

2013ஆம்  ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் 105 வது பிரிவு சொல்லும் சட்டம் படி எட்டுவழிசலைக்கு நிலம் கையாக்கப்படுத்தலாம் ,அதற்க்கான முழு உரிமை அரசுக்கு உண்டு என பரபரப்பான தீர்ப்பை அளித்தது.நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர்..

 

DINASUVADU 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்