பரபரப்பு…! அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல அரசியல் கட்சி தலைவர்…!
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் ஒவ்வாமை ஏற்பட்டிருப்பதால் அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று விழுப்புரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோதும் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடற்சோர்வு, தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பதால் உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும், ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர்.இன்று காலை மீண்டும் சென்னை திரும்பிய பிறகு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
DINASUVADU