பயோ மெட்ரிக் கருவியில் இனி இந்தி இருக்காது – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகளில் இனி இந்தி மொழி இருக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த முறையானது அனைத்து பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது.அந்த கருவிகளில் ஆங்கிலம் மொழி மட்டுமே இருந்தது.
ஆனால் , சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட பயோ மெட்ரிக் கருவியில் ஆங்கிலம், இந்தி மொழிகள் இருந்தன. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இது நடந்து விட்டதாகவும் இனி இது போன்ற நிகழ்வுகள் நடக்காது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.