தமிழக அரசியல் வரலாற்றில் பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர் வீட்டுக்குள் புகுந்து, ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ சோதனை நடத்தியதுமில்லை. இப்படி ஒரு சோதனை நடந்து, ஒட்டுமொத்த தமிழகமும் தலைகுனிவு.
இந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் சிபிஐ சோதனை நடந்த பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விஜயபாஸ்கர் வீட்டுக்குள் சிபிஐ புகுந்த பிறகும் அமைதி காக்கிறார்.சமீப நாட்களாக தன்னை இரும்புமனிதர் என்று வர்ணித்துக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அவரை பதவியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும்.அந்த வகையில் ஒரு பிளாஸ்டிக் பொம்மைக்கு இருக்கும் செயல்திறன் கூட எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என்பது நிரூபணமாகியிருக்கிறது.
விஜயபாஸ்கரை பதவி விலகச் சொன்னால், தன் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வரும் டெண்டர் முறைகேட்டு வழக்கை காரணம் காட்டி தன்னையும் பதவி விலகச் சொல்வார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பயப்படுவது புரிகிறது.அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் அங்கம் வகிக்கும் போலீஸ் படைக்கு ஒட்டுமொத்த தலைவர் என்ற கவுரவமும் பாரம்பரியமும் மிக்க பதவியில் இருக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரனும், தன் வீட்டுக்குள் சிபிஐ வந்து போனபிறகும் பதவியில் நீடிப்பது ஒட்டுமொத்த காவல்துறையின் கண்ணியத்தையும் சீர்குலைக்கும் செயலாகும்.
குட்கா ஊழல் விவகாரத்தில், இந்த டி.கே. ராஜேந்திரனின் பெயரும் அடிபட்ட நேரத்தில்தான், டிஜிபி பதவியில் இருந்து அவர் பதவி ஓய்வுபெற இருந்தார். அவர் பதவி நீட்டிப்பு கோருவதாக தகவல் வந்தபோதே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி, அதை அனுமதிக்கக் கூடாது என்று அப்போதே எல்லோரும் வலியுறுத்தினார்கள்.
ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, இவரை விட்டால் தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்கும் தகுதி வேறு யாருக்குமே இல்லை என்ற தொணியில் மத்திய அரசுக்கு பரிந்துரைக் கடிதம் அனுப்பி இவருக்கு பதவி நீட்டிப்பு பெற்றுத் தந்தார்.இப்படி தவறு செய்தவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருப்பவரும் குற்றச்சாட்டுக்கு உள்ளானதால்தான் இருவரும் பரஸ்பரம் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள மாநிலத்தின் கௌரவத்தையும் காலில் போட்டு மிதிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமானால், சி.பி.ஐ., தனது விசாரணையை நேர்மையாக இறுதிவரை நடத்தி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் நீதிமன்றத்தில் தண்டனை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வெளியிடட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்..
DINASUVADU