கார்த்திகை மாதம் தொடங்கியதும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் தமிழகம் , கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலிருந்து சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர்.
இங்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு வேட்டி, துண்டுகளை ஆற்றிலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பம்பை ஆற்றில் துணிகள் நிறைந்து அசுத்தம் அடைகிறது. இதனால் கேரளா உயர்நீதிமன்றம் இதனை அப்புறப்படுத்த உத்தரவிட்டது.
ஆதலால் கோவில் நிர்வாகம் பம்பை ஆற்றில் உள்ள துணிகளை அப்புறப்படுத்தி தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள சருத்திபட்டியில் உள்ள ஓர் தனியார் தோட்டத்தில் காய வைத்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இதனால், அப்பகுதியில் மாசு ஏற்படுவதாகவும், டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதாக புகார் கொடுத்தனர். இதன்பேரில் பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் பெரியகுளம் காவல்துறையினர் தோட்டத்திற்கு நேற்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அந்த துணிகளை அப்புறப்படுத்தி கேரள மாநில எல்லைக்குள் கொண்டு செல்ல உத்தரவிட்டுள்ளனர்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…