பன்னீர்செல்வம் மட்டும் இல்லை அதிமுக அரசே பதவி விலக வேண்டும்! கமல்ஹாசன்

Default Image

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது வரவேற்கத்தக்கது என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதவி விலக வேண்டும் என்பதை விட அதிமுக அரசே பதவி விலக வேண்டும்.8 வழிச்சாலை தொடர்பான என் கருத்தை, குரலை வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது.மேலும்  நான் பேசக்கூடாது எனக்கூற எச்.ராஜாவுக்கு உரிமையே இல்லைஎன்றும் கூறியுள்ளார். தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்டம் என்பது வெறும் கண்துடைப்பாகவே உள்ளது.

Image result for kamal

காவிரி நதிநீர் ஆணையம் தேவைதான், விவசாயிகளுக்கு தண்ணீர் மட்டுமே கேட்டேன். காவிரி நதிநீர் ஆணையம் கிடைத்தது வெற்றிதான், அதை இரு மாநிலங்களும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். திட்டங்கள் தேவையா, தேவையில்லையா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்றும்  மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்